கேட்பாரற்று கிடக்கும் ரூ.360 கோடி: இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுவிஸ் வங்கி!

  0
  3
  சுவிஸ் வங்கி

  கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து சுமார் 2ஆயிரத்து 600 வாங்கி கணக்குகள் செயல்பாடில்லாமல் உள்ளது.

  சுவிட்சர்லாந்து வங்கிகளில் கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து சுமார் 2ஆயிரத்து 600 வாங்கி கணக்குகள் செயல்பாடில்லாமல் உள்ளது. இதில் 10 இந்தியர்களின் கணக்குகளும் அடங்கும். இந்த வாங்கி கணக்குகளில் சுமார் 360கோடி பணம் கேட்பாரற்று உள்ளதாம். இந்த பணத்திற்கு இதுவரை  யாரும் உரிமை கோரவில்லை.

  swiz

  இந்நிலையில் இந்த பணத்திற்கு உரிமை கோர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் 15-ஆம் தேதியுடன் இந்த  உரிய ஆவணத்துடன் பணத்திற்கு உரிமை கோரவில்லை என்றால் பணம் மொத்தமும் அந்நாட்டு அரசுக்கு சொந்தமாக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

  swiz

  டேராடூனைச் சேர்ந்த ஒரு வங்கி கணக்கு, கொல்கத்தா, மும்பையைச் சேர்ந்தவர்களின் தலா இரண்டு கணக்குகள் என 10 இந்தியர்களின் படத்திற்கு இதுவரை உரிமை கோரப்படவில்லை.