கெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்!!

  0
  1
  North Korea is the worst Trump

  அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஏவுகணை சோதனையை நடத்தி அதில் வெற்றி கண்டுள்ளது வடகொரியா. இதன் மூலம் செய்வதறியாது முழி பிதுங்கி வருகிறது அமெரிக்கா. ஏவுகணை சோதனை நடத்துவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியா இருநாடுகளுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவர் கூறுவதை மற்றொருவர் தொடர்ந்து கேட்க மறுத்து வருவதால் இந்த பதற்றம் நிலவி வருகிறது.

  இந்த நிலையில், தென் கொரியா ராணுவத்துடன் அமெரிக்கா கூட்டாக இணைந்து கொண்டு வடகொரிய எல்லையில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. இதை எச்சரிக்கும் விதமாக சில மாதங்கள் அமைதியாக இருந்த வட கொரியா இரு வாரங்களுக்கு முன்பு மீண்டும் தனது ஏவுகணை தொடர்பான சோதனையை துவங்கியது.

  இது குறித்து பேசிய வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ கூறுகையில், வட கொரியா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சூசகமாக நடக்க விடாமல் தடுத்து வருகிறார். தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தும் முனைப்பில் கொடிய விஷம் போன்று செயல்பட்டு வருகிறார். மீண்டும் கூறுகிறோம், நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம். அதே நேரம் போர் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்றார். இதற்கிடையில் நேற்று வடகொரியா இரண்டு சிறிய ரக ஏவுகணைகளை சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஆனது மணிக்கு 380 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று மற்ற கண்டங்களில் இருக்கும் இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது ஆகும். அதேநேரம் தரையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் வரை உயரம் செல்லக் கூடியதாகவும் இருக்கும்.

  கடலில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனையில், பறந்து சென்ற ஏவுகணை ஜப்பான் அருகே இருக்கும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாக வடகொரியா ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது கூட்டு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இரு நாடுகளுக்கும் இந்த ஏவுகணை சோதனையின் மூலம் தென் கொரியா எச்சரிக்கை விடுவதாகவும் அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இதே போல் கூட்டு முயற்சியில் ஈடுபட்டபோது எச்சரிக்கை விடுத்தார். தற்போது மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே சூழ்நிலை தொடர்ந்தால் அப்பகுதியில் போர் நிலவ ஏனைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.