கூட்டுறவு வங்கி மோசடியில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : டி.டி.வி தினகரன்

  0
  2
  TTV Dinakaran

  மதுரையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன், நகைக் கடன் போன்ற சிறுவணிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

  மதுரையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன், நகைக் கடன் போன்ற சிறுவணிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடன் வழங்குவதில், பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாகத் தமிழக  முதலமைச்சருக்கு வந்த புகாரையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், சிறுவணிக கடன் வழங்குவதில் மோசடி செய்ததாக அவ்வங்கியின் துணை மேலாளர் பணிநீக்கம் செய்யப் பட்டார். இது தொடர்பாகத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 

  TTV DINAKARAN

  இது குறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், சிறு வியாபாரிகளுக்கு வழங்கும் கடனில் நடந்துள்ள மோசடி குறித்து தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இரண்டு பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து பேசிய தினகரன், அந்த சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.