கூடத்தட்டுன பொடி மீன்…மருந்துக் குழம்பு

  0
  2
  பொடி மீன்...மருந்துக் குழம்பு

  மீன் பிடித்து வந்த படகில் இருந்து வரும் மீனை மூங்கில் கூடைகளில்.அள்ளிப் போவார்கள்.அந்த மூங்கில் கூடையில் இருக்கும் துளைகள் வழியே வெளியே விழும் மீனைத்தான் கூடத்தட்டுன பொடி மீன் என்கிறார்கள்.
  இதில் பலவிதமான மீண்கள் கலந்து இருப்பதால்தான்  இந்தக் குழம்பு சுவையாக இருப்பதாக நம்பப்படுகிறது.இதில் மழைகாலத்தில் பல விதமான நாட்டு மூலிகைகளை வறுத்து பொடி செய்து கலந்து இந்த மருந்துக் குழம்பு செய்யப்படுகிறது.

  food

  சேர்க்கப்படும் மருந்து பொருட்கள்:
  வெள்ளை மிளகு,
  வால் மிளகு 
  பறங்கி சக்கை
  சதகுப்பை

  turmeric

  அரிசி பத்திரி
  தாழ்ச்ச பத்திரி
  கண்டந்திப்பிலி
  காட்டுச் சம்மங்கி
  விரலி மஞ்சள்
  சித்தரத்தை
  பேரரத்தை

  food

  இவை அனைத்தையும் சம எடை எடுத்து வெறும் வானலில் கருகாமல் வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டால்,மீன் குழம்பில் மட்டுமல்ல,ரசம் வைக்கும் போதெல்லாம் சிறிது சேர்த்துக் கொண்டால்,ஆரோக்கியத்துக்கு நல்லது.

  food

  மீன்குழம்புக்குத் தேவையானவை:

  கூடைதட்டின பொடி மீன் ½ கிலோ
  சின்ன வெங்காயம் 200 கிராம்
  தக்காளி 2
  மிளகுத்தூள் 

  fish

  மல்லித்தூள்
  மஞ்சள்தூள்
  பூண்டு
  கறிவேப்பிலை
  உப்பு
  நல்லெண்ணெய் 50 மில்லி
  புளிக்கரைசல் 2 கப்

  food

  எப்படி செய்வது.
  வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,எண்ணெய் ஊற்றி,அது சூடானதும் வெங்காயம்,கறிவேப்பிலை பூண்டு சேர்த்து வதக்குங்கள்..
  எண்ணெய் பிரியும் போது தக்காளிகளை வெட்டிச் சேர்த்து கூடவே உப்பும் சேர்த்து வதக்குங்கள்.

  வெங்காயம் தக்காளி இரண்டும் குழைவாக வெந்த உடன்,அதில் மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளிகாய் தூள் , முதலில் சொன்ன மருந்துப்பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி விட்டு புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.

  பச்சை வாசனை போனதும் மீனைச் சேர்த்து 5 நிமிடத்தில் அடுப்பை அனைத்து விட்டு,மேலாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மூடி வைத்துவிட்டு , குறைந்தது ஒருமணி நேரம் கழித்து சாப்பிடுங்கள்.