குழாய் புட்டு எப்படி செய்வது?

  0
  2
  குழாய் புட்டு

  பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் காலை வேளைகளில் அவித்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. அதிலும் குழாய் புட்டு சாப்பிடுவது சிறந்த ஒன்று ஆகும். இதில் சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க. 

  putu

  தேவையான பொருட்கள்: 

  சிவப்பு அரிசி( பச்சரிசி) = 1/2 கிலோ 

  வெள்ளை ரவை- 100 கிராம் 

  வெல்லம் – 100 கிராம் (6 அச்சு)

  உப்பு – 1/4 தேக்கரண்டி 

  தேங்காய் – 1/2 மூடி 

  நெய் – 2 தேக்கரண்டி 

  செய்முறை:

  அரிசியை ஊறவைத்து கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். இதை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இத்துடன் வறுத்த ரவையை சேர்த்து, வெல்லத்தை 1/2 டம்ளர் தண்ணீரில் கலந்து சுத்தம் செய்து, தெளித்து பிசிறி உதிரியாக்கிக் கொள்ளவும்.

  putu

  அத்துடன் உப்பு சேர்த்து கிளறி,நெய்  சேர்த்து புட்டுக் குழாயில் சிறிது தேங்காய் பூ போட்டு, இதன் மேல் இரண்டு கரண்டி மாவு சேர்த்து தேங்காய் பூ போட்டு வேக வைக்கவும். 

  இதையும் படிங்க: காய்கறி இல்லையா கவலையே வேண்டாம்; கறிவேப்பிலை குழம்பு செய்வோம்!