குழந்தையை வைத்து செல்போன் கடையில் திருடிய தம்பதி…சிசிடிவி காட்சியில் வசமாக சிக்கினர்!

  9
  சிசிடிவி

  விலையைக்கேட்டு விட்டு வாங்காமல் சென்றுள்ளனர். அன்று மாலை செல்போன்களை  கணக்கிட்டதில் ஒரு செல்போன் காணாமல் போயுள்ளது தெரியவந்தது.

  சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மீனாட்சி மொபைல்ஸ் என்ற கடை ஒன்று உள்ளது. இதில் கடந்த வாரம் கணவன் மனைவி இருவரும் வந்து செல்போன்களை  பார்த்து விலையைக்கேட்டு விட்டு வாங்காமல் சென்றுள்ளனர். அன்று மாலை செல்போன்களை  கணக்கிட்டதில் ஒரு செல்போன் காணாமல் போயுள்ளது தெரியவந்தது.

  ttn

  இதையடுத்து கடையின்  உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த கடைக்கு வந்த கணவன் மனைவி இருவரும் தங்கள் மகளை  கடைக்குள் புகுந்து செல்போன் எடுக்க சொல்வதும், குழந்தை கொண்டு வந்து கொடுத்ததும் மனைவி அங்கிருந்து வேகமாக நடையை கட்டுவதும் தெரியவந்தது. 

  ttn

  இதுகுறித்து கடையின் உரிமையாளர் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் உதவியுடன், தாதகாப்பட்டியைச் சேர்ந்த நாகேந்திரன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி இருவரையும் கைது செய்தனர். போலியாக பிரஸ் என்று ஒட்டப்பட்டிருந்த அவரது வாகனம் மற்றும் வழக்கறிஞர் என்று அச்சடிக்கப்பட்டிருந்த விசிட்டிங் கார்டுகளை  பறிமுதல் செய்தனர்.  மேலும் இதுபோல வேறு எங்கெல்லாம் கணவன் மனைவி இருவரும் கைவரிசை காட்டியுள்ளனர் என்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.