குழந்தையின் உதட்டில் முத்தம் – ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் கைது

  0
  3
  ttn

  ஆஸ்திரேலியாவில் முன்பின் தெரியாத குழந்தையின் உதட்டில் முத்தமிட்டதற்காக இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  சிட்னி: ஆஸ்திரேலியாவில் முன்பின் தெரியாத குழந்தையின் உதட்டில் முத்தமிட்டதற்காக இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  28 வயது கொண்ட இந்திய இளைஞர் ஒருவர் தற்போது ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீன் காட்சியகத்தில் முன்பின் தெரியாத குழந்தை ஒன்றை தூக்கி அதன் உதட்டில் இரண்டு முறை அந்த இளைஞர் முத்தமிட்டுள்ளார். குழந்தையை வலிந்து தூக்கி அவர் முத்தமிட்டதை கண்ட அந்த குழந்தையின் தந்தை ஓடிவந்து இளைஞரைப் பிடித்து விசாரித்துள்ளார்.

  வசமாக சிக்கிக் கொண்டதால் குழந்தையின் தந்தையிடம் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுள்ளார். “என்னை மன்னித்து விடுங்கள்” என்று மும்முறை ஆங்கிலத்தில் கூறி இளைஞர் நழுவப் பார்த்தார். ஆனால் குழந்தையின் தந்தை இளைஞரை போலீசிடம் ஒப்படைத்தார். இதன் காரணமாக அந்த இளைஞர் தற்போது ஆஸ்திரேலிய சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்திய இளைஞரின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர்.