குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி: வழிமறித்த காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

  0
  3
  Police

  கடந்த மாதம் 13 ஆம் தேதி சிதம்பரத்தில் தம்பதியினர் தனது இரண்டு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

  கடந்த மாதம் 13 ஆம் தேதி சிதம்பரத்தில் தம்பதியினர் தனது இரண்டு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த வழியே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகனும்   மற்றும் காவலர் சார்லஸும் அந்த தம்பதியினரை இரு சக்கர வாகனத்தில் இருவர் தான் வர வேண்டும், நீங்கள் ஏன் நான்கு பேர் வந்தீர்கள் என்று கூறி வழிமறித்துள்ளனர். வாகனத்தின் ஆவணங்களைச் சரி பார்த்த பின்னர் அவர்களுக்கு அபராதம் அளித்துள்ளனர்.இதனால் இரு தரப்பினர் இடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
   

  Police

  இதனையடுத்து, குழந்தைகளைக் கூடுதலாக அழைத்துச் சென்றதாகக் கூறி அந்த தம்பதியினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால், சோதனையில் ஈடுபட்ட  சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகனையும் காவலர் சார்லஸையும் ஆயுதப்படைக்கு மாற்றி கடலூர் எஸ்.பி. அபினவ் உத்தரவிட்டுள்ளார்.