குற்றால அருவியில் குளிக்க தடை நீக்கம்!

    0
    4
    Courtallam falls

    Courtallam falls

    தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வந்த நிலையில், தமிழகத்தின் நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்திருந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து வந்த நிலையில் சில நாட்களாக நெல்லை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. குற்றாலம் மெயின் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், பொதுமக்களின் பாதுகாப்பு காரணமாக குற்றால அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தற்போது குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளதால், பொதுமக்கள் அருவிகளில் குளிப்பதற்கு  விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.