குற்றவாளிகளின் பெயர் மற்றும் முகவரி அடங்கிய பேனர்….உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அகற்றாத யோகி ஆதித்யநாத் அரசு

  0
  7
  delhi violence

  உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று நடைபெற்ற  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. கலவரகாரர்கள் நடத்திய கோர தாக்குதலில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர் மேலும் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தது. இதனையடுத்து போலீசார் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் அங்கு அமைதி திரும்பியது.

  உத்தர பிரதேசத்தில் சி.ஏ.ஏ. போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய கலவரகாரர்களின் பெயர், படம் மற்றும் போட்டா அடங்கிய பேனர்களை அலகபாத் உயர் நீதிமன்றம் உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நேற்று மாலை வரை அகற்றவில்லை. 

  உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று நடைபெற்ற  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. கலவரகாரர்கள் நடத்திய கோர தாக்குதலில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர் மேலும் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தது. இதனையடுத்து போலீசார் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் அங்கு அமைதி திரும்பியது.

  high court

  இந்நிலையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றவாளிகளின் படம், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பேனர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் லக்னோவின் பல்வேறு முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டது. மேலும் அந்த பேனரில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதற்கு இவர்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையெனில் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அதில் குறிப்பிடபட்டு இருந்தது.

  பேனர் விவகாரத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது நீதிமன்றம்  மாநில அரசின் பேனர் நடவடிக்கை பெரிய அநியாயம். மேலும் இது தனிநபர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான முழுமையாக ஆக்கிரமிப்பு. மாநிலத்தில் நல்லெண்ணம் மேலோங்க வேண்டும் என உத்தர பிரதேச அரசை கண்டித்தது. மேலும் இந்த வழக்கில் நேற்று தனது தீர்ப்பை அறிவித்தது. லக்னோவில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் பேனர்களை உடனடியாக நீக்க வேண்டும். மேலும் இம்மாதம் 16ம் தேதிக்குள் இது தொடர்பான இணைக்க அறிக்கையை பதிவாளரிடம் அளிக்க வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

  yogi

  ஆனால் நேற்று மாலை அந்த பேனர்களை உத்தர பிரதேச அரசு நீக்கவில்லை. ஹோலி பண்டிகைக்கு பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசகர் ஷலப் மணி திரிபாதி கூறுகையில், நாங்கள் அலகாபத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஆய்வு செய்து வருகிறோம். போஸ்டர்களை அகற்ற எதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வு செய்யப்படுகிறது. எங்கள் நிபுணர்கள் அதனை ஆராய்ந்து வருகின்றனர் என தெரிவித்தார்.