குறைந்த மதிப்பெண்  ..தற்கொலை செய்த கல்லூரி பெண்-கல்லூரியின் அலட்சியத்தால் பொசுங்கிய பெண்ணின் லட்சியம் .

  0
  3
  Hyderabad suicide

  சிறுமி சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்தும்  கல்லூரி வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

  ஹைதராபாத்தில்,ஒருகல்லூரி  மாணவி தனது விடுதி குளியலறையில் தூக்கிலிடப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிறுமி சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்தும்  கல்லூரி வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

  college student

  தெலுங்கானாவில்  ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி உடல்நிலை சரியில்லாமலிருந்தும் ,பரீட்சைக்கு படிக்க முடியாததால் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றார்.அதனால் அவர் மனமுடைந்து கல்லூரி விடுதி குளியலறையில் தற்கொலை செய்து கொண்டார்.தேர்வுக்கு முன் அந்த மாணவி தன் உடல்நிலை சரியில்லையெனவும்,எக்ஸாம் எழுத தான் தயாராகவில்லை எனவும்,விடுமுறை கேட்டுள்ளார்.ஆனால் கல்லூரி நிர்வாகம் லீவ் தராததால் மார்க் குறைவானதால் தற்கொலை செய்து கொண்டதாக மாணவர்களும் ,அப்பெண்ணின் பெற்றோரும் கல்லூரி மீது குற்றம் சாட்டினார்கள் .அவரின் தற்கொலைக்கு பிறகு அவர் மார்க் அதிகமாக எடுத்ததாக கல்லூரி மாற்றி அறிவித்தது. 

   

   

  இதனால் அந்த கல்லூரி மாணவர்கள்  தங்கள் கல்லூரிக்கு மாணவியின் பிரேதத்தை எடுத்து  சென்று அங்கு போராட்டம்  நடத்த விரும்பினார். ஆனால்   பிரேத பரிசோதனை செய்யாததால் போலீசார் தலையிட்டு  தடுத்தனர். இதற்கிடையில், சிறுமியின் தந்தை freezer பாக்ஸ்  முன் தரையில் விழுந்து அழுதபோது , ஒரு கான்ஸ்டபிள் சிறுமியின் தந்தையை உதைத்து வலுக்கட்டாயமாக விரட்டினார். இந்த முழு காட்சியும்  கேமராவில் சிக்கி ஊடகங்களில் வைரலாகியுள்ளது