குறைந்து கொண்டே வரும் தங்க விலை !

  0
  1
  gold and silver price

  தங்க விலை நேற்று காலை 136 ரூபாயும், மாலை மீண்டும் ரூ.16 ரூபாயும் குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் தங்க விலை குறைந்துள்ளது. 

  இந்த மாத துவக்கத்திலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 21ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வருகிறது. தங்க விலை நேற்று காலை 136 ரூபாயும், மாலை மீண்டும் ரூ.16 ரூபாயும் குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் தங்க விலை குறைந்துள்ளது. 

  gold

  இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,613க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.28,904க்கு விற்கப்படுகிறது. ஆறு நாட்களாகத் தங்க விலை ரூ.328 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

  மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.47.80க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.47,800க்கு விற்கப்படுகிறது.