குறைந்தது வெங்காய விலை : மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

  0
  1
  Onion

  வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இடங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

  வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இடங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் தமிழகத்தில் பெய்த கனமழையால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு போகச் சாகுபடி வெங்காயங்களும் பாதிக்கப்பட்டது. இதனால், பெரிய மார்கெட்டுகளான ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளூர் வெங்காய வரத்தும் குறைந்தது. இந்த மழை பாதிப்பு வெங்காய விலையை அதிரடியாக உயர்ச் செய்தது. 

  ttn

  ஒரு நாளைக்கு 70 லாரி வெங்காயங்கள் வந்து கொண்டிருந்த நிலையில், 30 லாரிகள் மட்டுமே வந்ததால் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.170 முதல் 200 வரையிலும் சின்ன வெங்காயம் ரூ.230 முதல் 250 வரையிலும் விற்கப்பட்டன. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, உணவகங்களிலும் உணவு விலை உயர்த்தப்பட்டன. தற்போது, வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் மழை சற்று குறைந்துள்ளதால் சந்தைகளுக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக  கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, இல்லத்தரசிகளிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.