குறைகிறது போக்குவரத்து விதி மீறல்களின் அபராதம்!

  0
  1
  Minister Vijaya baskar

  புதிய மோட்டர் வாகன சட்டத்தின் அபாரதங்கள் குறைக்கப்படும் , அபராத குறைப்பு பற்றி முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கப் படும்

  புதிய மோட்டர் வாகன சட்டத்தின் படி போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்ததை பல மாநில மக்கள் எதிர்த்ததால், அந்தந்த மாநிலங்கள் விருப்பப்படி அபாரதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. 

  Traffic violations

  அதன் படி, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் அபாரதத் தொகையை குறைத்து அமல் படுத்தின. ஆனால் தமிழகத்தில் இன்னும் புதிய மோட்டர் வாகன சட்டம் அமல் படுத்தப் படாத நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் புதிய மோட்டர் வாகன சட்டத்தின் அபாரதங்கள் குறைக்கப்படும் என்றும் அபராத குறைப்பு பற்றி முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கப் படும் என்றும் தெரிவித்துள்ளார்.