குரூப் 2 தேர்வில் தமிழ் பாடம் நீக்கப்பட்டது ஏன்? டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

  0
  1
  TNPSC

  குரூப்-2 மெயின் தேர்வில் மொழிப்பாடங்கள் தொடரும் எனவும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது.

  குரூப்-2 மெயின் தேர்வில் மொழிப்பாடங்கள் தொடரும் எனவும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது.

  தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதல் நிலைத்தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். குரூப் 2 ஏ பிரிவில் முதல் நிலைத்தேர்வு மட்டும் எழுதினால் போதும். இதுவே விதியாக இருந்தது. மேலும் முதல் நிலைத்தேர்வில் 100 மதிப்பெண்கள் மொழிப்பாடமாக இருக்கும் அதனை தமிழ் அல்லது ஆங்கில மொழியாக தேர்ந்தெடுக்கலாம். தற்போது முதல் நிலைத் தேர்வில் மொழிப்பாடங்கள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ். சி தெரிவித்தது.

  tnpsc

  இந்நிலையில் தற்போது  குரூப்-2 மெயின் தேர்வில் மொழிப்பாடங்கள் தொடரும் எனவும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது. திருக்குறள், சுயமரியாதை, திராவிட இயக்கம் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.