குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு !

  0
  2
  TNPSC

  டிஎன்பிஎஸ்சி- குரூப் 1 எழுத்துத் தேர்வுக்கான தேதி மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணைய செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

  டிஎன்பிஎஸ்சி- குரூப் 1 எழுத்துத் தேர்வுக்கான தேதி மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணைய செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

  அதில், டிஎன்பிஎஸ்சி- குரூப் 1 தேர்வு வரும் 22 முதல் 30 ந் தேதி வரை நடக்கவிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக ஜனவரி 5ஆம்  தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அந்த தேதிகளில் நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு வழக்கம் போலக் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  ttn

  தொகுதி- 1ல் அடங்கிய பதவிகளுக்கான நேர்காணல் 25 மற்றும் 29 ஆம் தேதியைத் தவிர்த்து, திட்டமிட்டபடி 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் சிறை அலுவலர்,  உளவியலாளர், திட்ட அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் திட்டமிட்டபடி 21 மற்றும் 22 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.