குருவிகளுக்கே கூடு இருக்கும்போது தமிழக மக்கள் வீடு இல்லாமல் இருக்கலாமா? ஓபிஎஸ் 

  0
  2
  OPS

  தமிழகத்தில் வீடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் 13.5 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

  தேனியில் நடைபெற்ற தேனி மாவட்டத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதிமுகவில் இணையும் விழாசில் பேசிய அவர், அதிமுகவை எந்த கொம் பானாலும் அசைக்க பார்க்க முடியாத எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. ஜெ. இறப்புக்கு பின்னர் அண்ணன் – தம்பிகளுக்கு ஏற்படும் சண்டை போல, சண்டை ஏற்பட்டு தற்போது சுமுகமாக பேசி தீர்த்து இன்றும் அதே அண்னன் தம்பியாக நானும், எடப்பாடி பழனிசாமியும் ஒற்றுமையாக வாழுந்து வருகிறோம். பொது வாழ்விற்கு வந்தால் பல்வேறு விமர்சனங்களை எதிர் கொள்ள தான் வேண்டும். திமுகதான் தங்களின் பொது எதிரி. 2021 ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும். 

  OPS

  குருவிக்கு கூட வீடு இருக்கும் சமயத்தில் தமிழகத்தில் யாரும் வீடு இல்லாமல்  இருக்கக்கூடாது என்ற நோக்கியில் 13.5 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன” எனக்கூறினார்.