குருபெயர்ச்சிக்கு உண்மையான பரிகாரம் எப்படி செய்ய வேண்டும்? குறைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்?!

  0
  6
  குருபெயர்ச்சி

  நவகிரகங்களில் ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் குரு ஒன்று மட்டும் தான் சுப கிரகமாக இருக்கிறது. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மைகள் வந்து சேரும் என்று பெரியோர்கர் சொல்லி வைத்தார்கள். அபரிமிதமான வளர்ச்சி, குழந்தைப்பேறு, திருமணம், அறிவிற்கு குருவே அதிபதி. குரு பார்த்தால் அசுப கிரகங்கள் கூட சுபமாய் மாறி நன்மையைக் கொடுக்க துவங்கும். இப்படி பல சிறப்புக்கள் நிறைந்த குரு பகவானை வழிபடுவதற்கு சில முறைகள் இருக்கின்றன. அதன் படி அவரை சரியாக வழிபடுவோருக்கு பல நன்மைகள் நிச்சயம் வந்து சேரும். 

  gurupeyarchi

  ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஞானத்தை குறையாது வழங்கி அருள்பவர் தெட்சிணாமூர்த்தி. இவருக்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
  குரு பகவானுக்கு ஏற்றப்படும் விளக்குகளின் எண்ணிக்கை 11 அல்லது 21 ஆகா இருப்பது சிறந்தது. தட்சிணாமூர்த்திக்கு பிடித்த மலர்கள் முல்லை, மல்லிகை. ஆகையால் அவருக்கு முல்லை அல்லது மல்லிகை மாலையை அணிவித்து வழிபடுவது சிறந்தது.
  தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும்.
  குரு காயத்திரி மந்திரம்.
  ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே க்ருணி அஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்.
  இந்த மந்திரத்தை தினமும் குறைந்தது 36 முறை கூறி வந்தால் வாழ்வில் உள்ள இன்னல்கள் அனைத்தும் விலகி நன்மை வந்து சேரும்.