‘குயின்’ வெப் சீரிஸுக்கு எதிராக வழக்கு : இயக்குநர் பதிலளிக்க நீதி மன்றம் உத்தரவு

  0
  2
  Queen

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு  பயோபிக்  வெப் சீரிஸாக குயின் என்ற ‘சீரீஸ்’ இயக்கப்பட்டு வருகிறது.

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு  பயோபிக்  வெப் சீரிஸாக குயின் என்ற சீரீஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இதனை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் இயக்கி வருகின்றனர். இந்த சீரீஸின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

  ttn

  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் தலைவி படத்துக்கு, ஜெயலலிதாவின் அண்ணன்  மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமின்றி, குயின் வெப் சீரீஸை வெளியிடத் தடை விதிக்க கோரி தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக குயின் சீரிஸை உருவாக்கி வரும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பதில் அளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.