குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர்…!

  0
  5
  அமைச்சர் கே.சி கருப்பணன்

  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் அப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சிறிது நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் பேருந்தில் ஏறி, பேருந்திலிருந்த பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். அதே போல் திமுக கழக பேச்சாளர் குடுகுடுப்பைக் காரர் வேடத்தில் சென்று வாக்கு சேகரித்தார். இந்த மாதிரியான புது வகை பிரச்சாரங்கள் இடைத்தேர்தல் களங்களில் நடைபெற்று வருகின்றன. 

  Minister K.C Karupanan

  அதனைத் தொடர்ந்து இன்று, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் அதிமுக சார்பாக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, விக்கிரவாண்டியில் உள்ள செம்மேடு கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மேளதாளங்கள் அமைக்கப்பட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்களுக்கு ஏற்ப அமைச்சர் கே.சி கருப்பணன் உற்சாகமாக நடனம் ஆடி மக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார். 

   அமைச்சர் கே.சி கருப்பணன்