குண்டுவெடிக்கும் என கடுதாசி எழுதிய விவசாயி ! ஆதரவின்றி தவிக்கும் கோழிகள் !

  0
  2
  henfarmer

  நாமக்கல் மாவட்டத்தில் அரிசி தராத கடை உரிமையாளரை பழிவாங்க அவரது பெயரில் குண்டுவெடிப்பு மிரட்டல் கடுதாசி எழுதி போட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  நாமக்கல் மாவட்டத்தில் அரிசி தராத கடை உரிமையாளரை பழிவாங்க அவரது பெயரில் குண்டுவெடிப்பு மிரட்டல் கடுதாசி எழுதி போட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

   

  நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் மின்னக்கல் பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார் மணிவேல். இவர் கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியும் வாங்கி கேரளாவுக்கு கடத்துவதாக கூறப்படுகிறது. இவருடைய ரெகுலர் வாடிக்கையாளரான விவசாயி ரவிக்குமார் 200 கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அரிசி கடை உரிமையாளர் மணிவேலிடம் கோழிகளுக்கு தீவணமாக ரேஷன் அரிசி வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் அரிசி தற்போது இல்லை கேரளாவுக்கு அனுப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார். வேண்டும் என்றே அரிசி தரவில்லை என்று கருதிய ரவிக்குமார், அவரை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என முடிவு எடுத்தார். ரேஷன் அரிசி வாங்கி விற்பதாக புகார் அளித்தால் தண்டனை எதுவும் பெரிதாக கிடைக்காது என்பதால், சேலம் ரயிலில் குண்டுவெடிக்கும் என கடிதம் எழுதி அதில் தெளிவாக மணிவேல் முகவரியை எழுதிப் போட்டுள்ளார். இந்த கடிதம் கிடைக்கப் பற்ற ரயில்வே நிர்வாகம் அனைத்து ரயில்கள், பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்தது. ஆனால் அது புரளி என தெரிய

  salemrailway

  வந்தது. கடிதத்தில் முகவரி தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததால் மணிவேலை தேடி சென்று விசாரித்துள்ளனர். ஆனால் அவர் மறுக்க பின்னர் அவரிடம் சண்டை போட்டுக் கொண்டு சென்ற ரவிக்குமார்தான் ஆத்திரத்தில் கடிதம் எழுதி இருக்கலாம் என போலிசார் சந்தேகம் அடைந்தனர். அதற்குக் காரணம் வெடிகுண்டு மிரட்டல் வெளியான பிறகு அந்த நபரை காணவில்லை. இதையடுத்து ஒருவழியாக அவரை தேடிப்பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தான் வளர்க்கும் 200 கோழிகள் ரேஷன் அரிசியைத்தான் விரும்பி சாப்பிடுகின்றன. ஆனால் மணிவேல் தீவணம் தர மறுத்ததால் பழிவாங்க அவர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தன்வினைத் தன்னைச்சுடும் சுட்டுவிட்டது விவசாயி விஜயகுமாருக்கு.