குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய துணை நடிகை…பெருந்தன்மையாக மன்னித்த நடிகர் யோகி பாபு

  0
  11
  யோகி பாபு

   யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே யோகி பாபு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

  சின்னதிரை மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில்   நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும்   கடந்த 5 ஆம் தேதி  யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே யோகி பாபு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

   

  ttn
   

  இதனிடையே  துணை நடிகை சுஜி என்பவர் யோகிபாபுவுக்கு திருமணம் ஆன நாள் முதல் அவரது புகைப்படங்களை வைத்து காதல் தோல்வி பாடல்களுக்கு அழுது கொண்டே   டிக் டாக் செய்து வந்தார்.

  ttt

  இதனால் யோகி பாபுவுக்கு அந்த பெண்னுக்கு என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்தது.  இதையடுத்து இதுகுறித்த விசாரணையில், துணை நடிகை விஜி தீவிர யோகிபாபுவின் ரசிகை என்றும் லைக்ஸ்களை வாங்க இவ்வாறு செய்து வந்ததும் தெரியவந்தது.  

  ttn

  இந்நிலையில் கோவாவில் படப்பிடிப்பில் உள்ள யோகி பாபு இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘அவர் எனக்கு யாரென்றே தெரியாது. ரசிகையாக இருந்தாலும் என் மனைவி போட்டோவை போட்டு  அழுது டிக் டாக் செய்திருப்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. அவர் செய்தது தவறு தான். இருந்தாலும் அந்த பெண்ணை காயப்படுத்த நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது அவரின் இந்த செயல் என் குடும்ப வாழ்க்கையை  மட்டுமல்ல அந்த பெண்ணின் குடும்ப வாழ்விலும் சிக்கல் உருவாக்கி விடும். இனி இதுபோன்று செய்யவேண்டாம் என்று கூறுங்கள்’ என்று புன்னகையுடன் கூறியுள்ளார்.  இதை தொடர்ந்து  துணை நடிகை சுஜியும் தனது செயலுக்கு வருத்தம்  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.