குடும்பத்திற்கு 5கிலோ என 1000 கிலோ காய்கறிகள்; அசத்தும் இயற்கை விவசாயி!

  0
  5
  விவசாயி மூர்த்தி

  இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல், பணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல், பணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

  tt

  இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இயற்கை விவசாயி மூர்த்தி,  1,000 கிலோ காய்கறிகளை டெம்போ வாகனத்தில் எடுத்துச் சென்று ஏழை எளிய மக்களுக்கு தலா 5கிலோ என இலவசமாக கொடுத்து வருகிறார். இவர் ஏற்கனவே ஆவாரம்பூ சூப், முடக்கத்தான் சூப் என ஏராளமான சூப் வகைகளைப் பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுத்துள்ளார்.

  ttn

  இதுகுறித்து கூறும் இயற்கை விவசாயி மூர்த்தி, ‘தினக்கூலி ஆட்கள் சாப்பிட முடியாமல் சிரமப்படுகிறார்கள் என்பதை கேள்விப்பட்டு நான் ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகளை கொடுக்க முடிவு செய்தேன். அவங்க ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. இதுல எனக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து அரிசி போன்ற பொருட்களை கொடுக்கஉள்ளேன்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.