குடுக்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யா : தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறிய தமிழிசை; தாளிக்கும் நெட்டிசன்கள்!?

  0
  9
  தமிழிசை

  தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று மீண்டும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று மீண்டும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  bjp

  மக்களவை தேர்தலில் பாஜக தேசிய அளவில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்தாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியை கூட பாஜகவால் பெற முடியவில்லை. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா போன்றோர் படுதோல்வி அடைந்துள்ளனர். 

   

  இதையடுத்து தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார். இது குறித்து  தமிழிசை சௌந்தரராஜன்  தனது டிவிட்டர் பக்கத்தில், ‘என் கண்களில் கண்ணீர். தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல. அமைச்சரின் பேட்டியை கேட்டதும் ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவது தான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர்’ என்று பதிவிட்டிருந்தார். 

   

  இதை தொடர்ந்து மற்றொரு பதிவில், ‘தமிழகத்தில்  தண்ணீரில்லாமல் போனதற்கு இந்த நாட்டை 60 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ்தான் காரணம்.எனவேதான் எங்கள் அமைச்சர் நிதின்கட்கரி இந்தமுறை முதல் பணியாகத் தமிழகத்திற்கு தண்ணீர்தர காவிரி கோதாவரி இணைப்பு என அறிவித்துள்ளார் எனவே இங்கே தாமரை மலரந்தே தீரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  tamilisai

  இதை கண்ட வலைதளவாசிகள், திரும்பவும் முதல்ல இருந்தா……  முடியலடா சாமி, தாமரை வளர்வது இருக்கட்டும் உங்களை வீட்டுக்கு அனுப்ப போகிறார்களாம் அடுத்த தலைவர் ரெடியாம் அவர் வந்து கூவட்டும் தாமரை மலரும்னு உங்களுக்கு குடுத்த தூத்துக்குடியில் கூட மலர வைக்க முடியவில்லை தமிழ்நாடு முழுவதும் இப்படி மலரவைப்பீர்’ என்று கண்டமேனிக்கு தமிழிசையை வசைபாடி வருகின்றனர்.