குடி பழக்கத்தால் தான் வாழ்க்கையை இழந்தேன்.. மனம் திறந்த பிரபல நடிகை!

  0
  1
  நடிகை

  செல்லும் இடங்களில் எல்லாம் வெல்வெட் கம்பள விரிப்பு, ஜூஸ் டம்ளர்களை ஏந்திக் கொண்டு உதவியாளர்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவகம் செய்யும் உதவியாளர்கள், எந்நேரமும் கேமிராக்களின் ப்ளாஷ் வெளிச்சம், புகழ் தருகிற போதை, பிரபலங்களின் வாழ்க்கையை சூன்யத்தில் தள்ளிவிட இவை மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

  செல்லும் இடங்களில் எல்லாம் வெல்வெட் கம்பள விரிப்பு, ஜூஸ் டம்ளர்களை ஏந்திக் கொண்டு உதவியாளர்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவகம் செய்யும் உதவியாளர்கள், எந்நேரமும் கேமிராக்களின் ப்ளாஷ் வெளிச்சம், புகழ் தருகிற போதை, பிரபலங்களின் வாழ்க்கையை சூன்யத்தில் தள்ளிவிட இவை மட்டுமே போதுமானதாக இருக்கிறது. இது ஏதோ நேற்றைய திரையுலகில் மட்டும் நடந்த விஷயம் கிடையாது. இன்றும் இந்த நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கிறது. விதவிதமாக இறக்குமதியாகும் போதை வஸ்துக்கள் எல்லா வுட்களில் பரவி, விரவி கிடக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட நடிகை ஆண்ட்ரியா கண்ணீர் மல்க இன்றைய சினிமாவில் சீரழித்து வரும் பழக்கத்திற்கு எதிராக மனம் திறந்திருக்கிறார். அப்போ அன்றையா சினிமா…?

  manisha

  நடிகை மனிஷா கொய்ராலா அதைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் என மனிஷா நடித்த எல்லா படங்களுமே கொண்டாட்டங்கள் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என எல்லா மொழிகளிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் மனிஷா. இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு நோயிலிருந்து மீண்டெழுந்துள்ளார் நடிகை மனிஷா. 
  சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய நடிகை மனிஷா கொய்ராலா, எனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளேன். என்னைப் பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக நான் எப்போதுமே வருத்தப்பட மாட்டேன். புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி பேசுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திரையுலகில் உச்சத்தில் இருந்த போது எனக்கு மதுப்பழக்கம் இருந்தது. கிட்டத்தட்ட மதுபழக்கத்திற்கு நான் அடிமையாகவே இருந்தேன். இதனால் தான் எனது வாழ்க்கை மோசமானது என்று மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் கமலின் மகளான நடிகை ஸ்ருதிஹாசனும் தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!