குடியுரிமை சட்ட நகலை கிழிதெறிந்து கண்டன ஆர்ப்பாட்டம்..உதயநிதி ஸ்டாலின் கைது!

  0
  9
  protest

  இன்று காலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ttn

  ஆரம்பத்தில் 300 பேர் கொண்டு சாதாரண பேரணியாக நடந்த இந்த போராட்டத்தில், சுமார் 2000 திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில், உதயநிதி ஸ்டாலின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழிந்தெரிந்து, இந்தியாவைப் பிரிக்காதே, மக்களைப் பிரிக்காதே, அமித்ஷா ஒழிக, மோடி ஒழிக என்று கோஷங்களை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து தொடர்களும் அதே கோஷங்களை எழுப்பிய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

  ttn

  ஒரு சட்ட நகலைக் கிழிப்பது சட்டப்படி குற்றம் என்பதால் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டனர். ஆனால், தொண்டர்கள் அதற்கு  அனுமதிக்காததால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  ttn

  இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் தானாகக் கீழிறங்கி போலீசாருடன் சென்றார். அதன் பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் வேனில் ஏற்றி அவரை அழைத்துச் சென்றனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட திமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.