குடிமராமத்து, மழைநீர் சேகரிப்புக்கு கிடைத்த வெற்றி ! 3 மீட்டர் வரை உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம் !

  0
  2
  மழைநீர் சேகரிப்பு

  தமிழக அரசு மேற்கொண்ட குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது.
  தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. முக்கியமாக தலைநகரமான சென்னையில் நிலவிய கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் அன்றாட வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரயில் மூலமாகவும்  தண்ணீர் கொண்டு வரப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

  rain water save

  இதை அடுத்து தண்ணீர் பஞ்சத்தை நிரந்தரமாக போக்குவதற்கு தமிழகம் முழுவதும் குடிநீர் சேகரிப்புக் கட்டமைப்பு பற்றிய விழிப்புணர்வை அரசு உத்தரவுப்படி குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டது. மேலும் தூர் வாருவது, ஆழப்படுத்துவது என குடிமராமத்து பணிகளையும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டது. இந்த முயற்சிக்கு கிடைத்த பலனாக 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 1,286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்து இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு கடந்த செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 2.5 மீட்டர் அளவு உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  rain water

  இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அளித்துள்ள தகவலின்படி 3,00,000 வீடுகளில் மழைநீர் சேமிப்புக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 2,17,000 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளன. மேலும், சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கையால் 27,000 வீடுகளில் மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தாத வகையில் இருந்த 320 கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், அதிகபட்சமாக அம்பத்தூரில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு 2.5 மீட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல், வளசரவாக்கம், மணலி, மாதவரம் பகுதிகளில் 2 மீட்டர் வரையும், ராயபுரம், அண்ணா நகர், கோடம்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் 1 முதல் 2  மீட்டர் வரையும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.