குடிமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாஸ்கோவில் கடும் நடவடிக்கை

  0
  2
  mascow

  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குடிமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

  மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குடிமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

  ரஷ்ய தலைநகரில் உள்ள அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளனர். இதனால் மக்கள் அவசர மற்றும் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

  ttn

  இன்று முதல் மாஸ்கோவில் வசிப்பவர்கள் அவசர மருத்துவ உதவிக்காக வெளியே செல்லவும், தேவைப்பட்டால் வேலைக்குச் செல்லவும், உணவு மற்றும் மருந்து போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு ஷாப்பிங் செய்யவும், வீட்டுக் கழிவுகளை வெளியேற்றவும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பிபிசி தெரிவித்துள்ளது. மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து 100 மீட்டருக்கு மேல் வாக்கிங் அழைத்து செல்ல முடியாது என்றார். ரஷ்யாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் 1,534ஆக பதிவாகியுள்ளன. அவற்றில் 8 பேர் இறந்துள்ளனர். 64 பேர் குனமடைந்துள்ளனர்.