குடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி! கடமையைச் செய்த போலீசார்!

  0
  3
  லீ டாலெக்

  நம்ம ஊர்ல தெருவுக்கு நாலு டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரைக்கும் தெறந்திருக்கு. அதுக்கு பின்னாலும் சில ப்ரைவேட் விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள், சொகுசு பங்களாக்கள்னு விடிய விடிய மதுவும், மாதுவும் சட்டத்துக்கு விரோதமா ராத்திரி முழுக்க கச்சேரி களைகட்டி, சேவல் கூவுகிற நேரத்துல விடிந்தும், விடியாமலும் நிறை போதைகள் வீடு திரும்புவது நிறைய பிரபலங்களுக்கு சகஜமாகிப் போன விஷயம் தான்

  நம்ம ஊர்ல தெருவுக்கு நாலு டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரைக்கும் தெறந்திருக்கு. அதுக்கு பின்னாலும் சில ப்ரைவேட் விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள், சொகுசு பங்களாக்கள்னு விடிய விடிய மதுவும், மாதுவும் சட்டத்துக்கு விரோதமா ராத்திரி முழுக்க கச்சேரி களைகட்டி, சேவல் கூவுகிற நேரத்துல விடிந்தும், விடியாமலும் நிறை போதைகள் வீடு திரும்புவது நிறைய பிரபலங்களுக்கு சகஜமாகிப் போன விஷயம் தான். ஆனா சட்டங்களை கடுமையாக கடைப்பிடிக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கூட பிரபலங்கள் போடுகிற ஆட்டம் சமீபமா அதிகரிச்சுக்கிட்டு வருது.
  சரி, பிரபலங்கள் தான் இப்படி ஆட்டம் போடுறாங்கன்னு பார்த்தா பிரபலத்தோட மச்சினிச்சி போடுற ஆட்டம் பலே ரகம் என்று வியக்கிறார்கள் சிங்கப்பூர்வாசிகள். அஜித் ‘மங்காத்த’ படத்துல அறிமுகப்படுத்துன சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கு நிஜ சொந்தக்காரரான நடிகர் ஜார்ஜ் க்ளூனி பிரபலமான ஹாலிவுட் நடிகர். செம ஸ்டைலிஷான ஜார்ஜ் க்ளூனி, த்ரீ கிங்ஸ், ஸ்பை கிட்ஸ், கிராவிட்டி உள்ளிட்ட நிறைய ஹாலிவுட் படங்கள்ல  நடிச்சவர். டாம் க்ரூஸிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜார்ஜ் க்ளூனியோட மனைவி அமல் க்ளூனியின் சகோதரி லீ டாலெக் என்பவர் சிங்கப்பூர்ல கணவரோட வசித்து வருகிறார். 

  george

  இந்நிலையில், லீ டாலெக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராத்திரி பிஎம்டபிள்யூ காரை எடுத்துக்கிட்டு இரவு விடுதிக்கு போயிருக்கார். இராத்திரி முழுவதும் மதுபானங்களை குடிச்சுட்டு, முழு போதையில் தள்ளாடிய படியே தனது காரை எடுத்துக் கொண்டு அதிகாலை 3.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.  நம்மூர் மாதிரி நூறு ரூபாய் வாங்கிக்கிட்டு ஊதச் சொல்ற ரகம் எல்லாம் சிங்கப்பூர் போலீசிடம் வேலைக்காகாது. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் காவல் துறையினர் லீ டாலெக்கின் காரை நிறுத்தி, நிதானத்தை இழந்து, குடிபோதையில் இருப்பதை அறிந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 
  இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் போக்குவரத்து நீதிமன்றம், ஜார்ஜ் க்ளூனியின் மச்சினி லீ டாலெக்கிற்கு மூன்று வாரம் சிறை தண்டனையும் ரூ. 4.5 லட்சம் அபாராதமும் விதிச்சிருக்கு. பரவாயில்லையே… பிரபலமா இருந்தாலும் தண்டனைத் தர்றாங்களேன்னு நினைக்கறீங்களா? லீ டாலெக் இப்படி குடிச்சுட்டு ஓட்டுறது முதல் முறை கிடையாதாம். ஏற்கெனவே இப்படி குடிச்சிட்டு வண்டி ஓட்டி, ரெண்டு வருஷங்கள் அவருக்கு வாகனம் ஓட்ட தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் குடி யாரை விட்டு வெச்சுது?