குடிபோதையில் சிக்கிய இளைஞர்கள்! போலீசின் வாக்கி டாக்கியில் அழுது புலம்பியதால் விபரீதம்!! 

  0
  8
  walkie talkie

  குடிபோதையில் காவல் ஆய்வாளர் வாக்கி- டாக்கி எடுத்து அழுது புலம்பிய வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  குடிபோதையில் காவல் ஆய்வாளர் வாக்கி- டாக்கி எடுத்து அழுது புலம்பிய வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ராயலா நகர் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் சேவியர் நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது குடிபோதையில் 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் தள்ளாடிக்கொண்டு வந்தனர்.

  வாக்கி டாக்கி

  போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கேரளாவைச் சேர்ந்த வருண், உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது.  இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, தனது வாகனத்தில் ஆய்வாளர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். 

  அப்போது வருண் குடிபோதையில் காவல் ஆய்வாளர் வைத்திருந்த வாக்கி டாக்கியை எடுத்து அழுது புலம்பியுள்ளார். தான் குடிக்கவில்லை என்றும், தவறாக காவல் ஆய்வாளர் அழைத்து செல்வதாகவும் கூறியதாக தெரிகிறது. இது பணியில் உள்ள காவல் உயரதிகாரிகளுக்கு சென்றது. இதனையடுத்து வருண் மற்றும் அஜித்  மீது ரகளையில் ஈடுபட்டதாகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.