“குடிநோயாளிகள் மருந்துசீட்டுடன் வந்தால் மதுபாட்டில் தரப்படும்” கேரள அரசின் நெறிமுறைகள்!

  0
  1
  குடிநோயாளிகள்

  இதனால் குடிமகன்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.

  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.

  tt

  இந்நிலையில் கேரளாவில் மது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது .  கேரளாவில் 16 லட்சம் பேர் நாள்தோறும் மதுகுடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது , மது குடிக்காவிட்டால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படுவோருக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது. இதை பெற்றுள்ள  குடிநோயாளிகள் மருத்துவரை அணுகி மருந்து குறிப்பு சீட்டை பெற வேண்டும். பின்பு மருந்து சீட்டு மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். இதை தொடர்ந்து அவர்களுக்கு  மதுக்கடைகளில் குறிப்பிட்ட அளவு மது பாட்டில்கள் வழங்கப்படும்.

   

  ttn

  முன்னதாக மது கிடைக்காததால் 7 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தினமும் 5 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.