குடிசை வீட்டில் 21அடி ஆழத்திற்கு குழி தோண்டிய பெண்: போலீசில் வசமாக சிக்கிய மந்திரவாதி!

  11
  21 அடி ஆழ குழி

  வீட்டிற்குள் குழி தோண்டி சில மாந்திரீக பொம்மைகள் மற்றும் சில கயிறுகளை எடுத்து அழித்தார்’ என்று கூறி பரபரப்பைக்  கிளப்பினார். 

  சென்னை: பெண் ஒருவர் மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு  வீட்டிற்குள் 21 அடி ஆழ குழி தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  சென்னை கீழ்பாக்கத்தை அடுத்த டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது கணவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். மைதிலி வீட்டிலிருந்து நீண்ட நாட்களாகப் பள்ளம் தோண்டும் சத்தம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம்  சிறிய குடிசை வீட்டில் கொஞ்சம் கூட பாதுகாப்பு பற்றி யோசிக்காமல் 21 அடி  ஆழத்திற்குப் பள்ளம் போட்டு  வைத்திருந்தார் மைதிலி.

  chennai

  இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது,  வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷ் எங்கள் குடும்பத்துக்குச் செய்வினை செய்திருப்பதாகவும் அதனால் தான் குடும்பத்தில் பிரச்னை நடப்பதாகவும் கூறினார்.  அதனால் வீட்டிற்குள் குழி தோண்டி சில மாந்திரீக பொம்மைகள் மற்றும் சில கயிறுகளை எடுத்து அழித்தார்’ என்று கூறி பரபரப்பைக்  கிளப்பினார். 

  இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமைந்தகரை தாசில்தாருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனால் மைதிலி வீட்டுக்கு விரைந்த வருவாய்த்துறையினர் மைதிலியிடம் விசாரணை நடத்தினர். அருகில் வசிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் வீட்டில் உள்ள பள்ளத்தை உடனடியாக மண்ணைப் போட்டு மூடுமாறும் கூறி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வருவாய்த்துறையினர் எச்சரித்துச் சென்றனர். 

  chennai

  இருப்பினும் வருவாய்த்துறையினர் எழுத்துப் பூர்வமாக போலீசில் புகார் அளித்தனர். அதில் மந்திரவாதி சுரேஷை  காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யுமாறும், மறு உத்தரவு வரும்வரை அவரை விடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.