குடிகார கணவன்.. இரண்டு குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு!

  0
  1
  suicide

  திருமணம் ஆனதிலிருந்து பார்த்தசாரதி,  தச்சுத்தொழில் மூலம் வரும் பணத்தை எல்லாம் மது வாங்கி குடித்து விடுவாராம்.

  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பார்த்தசாரதி- வசந்தி தம்பதி. பார்த்தசாரதி தச்சுத்தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதுக்குட்பட்ட இரண்டு மகள்கள் இருக்கின்றனர். திருமணம் ஆனதிலிருந்து பார்த்தசாரதி,  தச்சுத்தொழில் மூலம் வரும் பணத்தை எல்லாம் மது வாங்கி குடித்து விடுவாராம். இதனால் இந்த தம்பதிக்கிடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்துள்ளது. இதே போல நேற்று முன்தினமும் சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை வலுக்க, வசந்தி குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். 

  ttn

  கணவனுடனான தகராறில் மனமுடைந்திருந்த வசந்தி, ஊருக்கு வெளியே இருந்த கிணறு ஒன்றில் மகள்களுடன் குதித்துள்ளார். அவ்வழியே சென்ற ஊர்மக்கள் கிணற்றில் உடல்கள் மிதப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார், அந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பார்த்தசாரதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளுடன் வசந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.