குடிகாரன் என்ற உண்மையை மறைத்து திருமணம் செய்து, கொலைக்கு காரணமான குடும்பம்!

  19
  RadhiDevi

  திருமணத்திற்கு முன்பிருந்தே மொடாகுடிகாரனான குருமுனீஸ்வரனின் குடிப்பழக்கத்தை மறைத்து அவரது குடும்பத்தார் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமை செய்ததால், ரதிதேவி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

  மதுரை, திருமங்கலம் பிகேஎன் நாடார் பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ரதிதேவியை மாணவர்கள் கண்முன்னாலேயே அவரது கணவர் குருமுனீஸ்வரன் குத்தி கொலை செய்தார். திருமணத்திற்கு முன்பிருந்தே மொடாகுடிகாரனான குருமுனீஸ்வரனின் குடிப்பழக்கத்தை மறைத்து அவரது குடும்பத்தார் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமை செய்ததால், ரதிதேவி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

  Radhidevi murdered

  குடும்பம் நடத்த வரமறுத்த ரதிதேவியை திட்டமிட்டு கொலை செய்த குருமுனீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், தங்கள் மகளின் கொலைக்கு காரணமாக இருந்த குருமுனீஸ்வரனின் பெற்றோர், சகோதரிகள் அவர்களது கணவர்கள் என ஏழு பேர்மீது ரதிதேவியின் பெற்றோர் புகார் அளிக்கவே, அவர்கள்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிகாரன் ஒருவனின் கொடூர புத்தியால், கொலையை கண்முன்னே பார்த்த பிஞ்சுகளின் பயத்தை போக்குவது எப்படி?