குடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ  துவையல்

  0
  10
  வேப்பம் பூ  துவையல்

  மழைக்காலங்கள் துவங்கி விட்டது. நமது சுற்றுப்புறங்களில் இருக்கும் மரங்கள் எல்லாம் நன்றாக கழுவி விட்டது போல் பச்சை பசேலென இருக்கிறது. மரங்கள் பருவ காலத்தை நினைவு படுத்தும் விதமாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கும் வேப்பம் பூக்களை சேகரித்து, துவையல் செய்து சாப்பிடுங்கள்!

  neem flower

  தேவையான பொருட்கள்
  வேப்பம் பூ     – 100கி
  உளுத்தம் பருப்பு    – 4டீஸ்பூன்
  புளி            – சிறிய எலுமிச்சை அளவு
  காய்ந்த மிளகாய்    -10
  எண்ணெய்        – சிறிது
  உப்பு            – தேவையான அளவு
  செய்முறை

  neem flower

  வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வேப்பம் பூவை பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயையும் நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். சூடு ஆறிய பின்னர் இதனுடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு வலு சேர்க்கும் வேப்பம் பூ துவையல் ரெடி. 
  இந்த வேப்பம் பூ துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிவதோடு மீண்டும் பூச்சிகள் வயிற்றில் சேராமல் தடுக்கும் சக்தியும் வேப்பம்பூ துவையலுக்கு உண்டு.