குடலை எடுத்து நீரில் கழுவிய சாய் பாபா : பாவத்தை போக்கிய மகானின் அற்புதம்!

  0
  31
  பாபா

  கிணற்றடிக்கு அருகில் உள்ள ஒரு நாவல் மரத்தில் ஒரு துணியின் உதவியுடன் கட்டித் தொங்கவிடுவார்

  பாபா வசித்து வந்த மசூதியிலிருந்து  வெகுதொலைவில் ஒரு  பிரம்மாண்ட ஆலமரம் இருக்கும். அதன்  அருகில் ஒரு கிணறு இருக்கும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அங்கு வரும் பாபா,  கிணற்று நீரில் வாய்கொப்பளிப்பார்.  சில நேரங்களில் தனது குடலை  வாய் வழியாக எடுத்து நீரில் சுத்தம் செய்வார்.  

  sai

  பின்பு குடலை உலர வைக்க,  கிணற்றடிக்கு அருகில் உள்ள ஒரு நாவல் மரத்தில் ஒரு துணியின் உதவியுடன் கட்டித் தொங்கவிடுவார். சில சமயங்களில் அப்பகுதிக்கு வரும் சீரடி வாசிகள் அதை கண்டு பயந்து ஓட்டமும்  நடையுமாக சென்றுள்ளனர். பொதுவாக பிச்சை எடுத்து சாப்பிடும்  பாபா அவர்கள் அளிக்கும் உணவுமூலம் அவர்களின் பாவத்தை தனதாக்கி கொள்வாராம். பின்பு அதை தன்னிடமிருந்து போக்கவே, குடலை சுத்தம் செய்வாராம்.  இதை உடல் சுத்த விருந்தி என்று கூறுவார்கள்.

  sai

  கண்ட யோகம் என்ற ஒன்றும் உள்ளது. இது உடல் பாகங்களை தனி தனியாக பிரித்து எடுத்து வைப்பது. அப்படி ஒருமுறை சீரடி மசூதியில் பாபா கண்ட யோகத்தை மேற்கொண்டார். அவரின் உடல் பாகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தது. அப்போது பெரியவர் ஒருவர் பாபாவிடம் ஆசி வாங்க வர. பாபாவின் உடல் உறுப்புகள் சிதறி  கிடப்பதை கண்டு, யாரோ பாபாவை கொன்றுவிட்டார்கள் என்று நினைத்து பதறி விட்டார்.

  sai

  இந்த விஷயத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் முதலில் சொல்ல நினைத்த அவர்,  நாளை விசாரணை அது இது என்றால் என்னை அலைக்கழிப்பார்களே என்று பயந்து, யாரிடமும் சொல்லவேண்டாம் என்று எண்ணி அங்கிருந்து பயத்தோடு சென்றுவிட்டார். இருப்பினும் அவரது மனம் கேட்கவில்லை. பாபாவுக்கு என்ன தான் ஆனது என்று நினைத்து மீண்டும் மசூதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

  sai

  மசூதியின் உள்ளே பயத்தோடு, பதட்டத்தோடு சென்ற அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது அங்கு எந்த உடல் உறுப்புகளும் இல்லை. இதென்ன ஆச்சரியம் என்று நினைத்த அவர் எதேச்சையாகத் திரும்பிய போது, ஒரு மூலையில் பாபா அமர்ந்து தியானம் செய்து கொண்டிப்பதைப் பார்த்தார். கனவா? நிஜமா என்று குழம்பிய அவர் கண்களை கசக்கி கொண்டு பார்த்த போது, பாபா அந்த முதியவரை பார்த்து சிரிக்க, முதியவருக்கு பயம் அதிகமாகி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

  இப்படி தனது  வாழ்வில் பல அதிசயங்களை நிகழ்த்திய சீரடி சாய் நாதரின் அருளை பெறுவோம்..வாழ்வில் உயர்வோம்!