குஜராத்தில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ ராஜினாமா!

  0
  2
  congress mla

  குஜராத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு உள்ளது. இங்கு மிக வலிமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க இறங்கியது.

  குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் என்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
  குஜராத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு உள்ளது. இங்கு மிக வலிமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க இறங்கியது. எம்.எல்.ஏ-க்கள் அடிப்படையில் பாதிய ஜனதா கட்சியால் இரண்டு இடங்களில் மட்டமே வெற்றி பெற முடியும். 74 எம்.எல்.ஏ-க்கள் உள்ள காங்கிரசால் இரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும்.
  ஆனால், மூன்று இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது.

  gujarat

  காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் எளிதாக பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியது. இதன் பலனாக, நான்கு எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், பாரதிய ஜனதா கட்சி அங்கு மூன்று இடங்களை பெறும் வாய்ப்பு நெருங்கியது. தற்போது, காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று ஆளுங்கட்சியினர் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.