குக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்… ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை …

  0
  3
  Pressure cooker

  மாறி வரும் உணவுப் பழக்கங்களும், ஃபாஸ்ட் புட் போன்றவை அதிகமாக சாப்பிடுவதும் இதற்கு ஒரு முக்கியா காரணம் என்றே கூறலாம். 

  சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிலருக்கே வரும் இதய நோய்கள், இப்போது சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வருகிறது. மாறி வரும் உணவுப் பழக்கங்களும், ஃபாஸ்ட் புட் போன்றவை அதிகமாக சாப்பிடுவதும் இதற்கு ஒரு முக்கியா காரணம் என்றே கூறலாம். 

  Pressure cooker

  நாளை உலக தினம் என்பதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் இதய நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பேரணியை நடத்தினர். அப்போது இதய நோயை பற்றி பேசிய, ஸ்டான்லி மருத்துவமனையின் இதய நோய் மருத்துவர், மாறி வரும் உணவுப் பழக்கங்களாலும், உடற் பயிற்சி முறையாக செய்யாததாலும் பெரும்பாலானோருக்கு இதய நோய் ஏற்படுகிறது என்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

  Heart Disease

  மேலும், குக்கரில் உணவுகள் சமைப்பதை தடுத்தால் இதய நோயை குறைக்க வாய்ப்பு உள்ளது என்றும், சாதங்களை வேகவைத்து வடித்து சாப்பிடுவது தான் நல்லது என்றும் இதய நோய்க்கான அறிகுறிகள் மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி என்றும் கூறியுள்ளார்.