கிறிஸ்துமஸ் கிஃப்ட் … 7 வயது சிறுவனுக்கு  நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

  25
  Christmas gift

  ஜியார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவில் உள்ள ஏழு வயது சிறுவன் ஒருத்தன் கிறிஸ்துமஸ் தினத்திற்காக தந்து பெற்றோரிடம் ஆசையாக ஏர்பாட்ஸை(Airpods) பரிசாக கேட்டிருக்கிறான். பெற்றோரும் தங்கள் செல்ல குழந்தை ஆசையாகக் கேட்கிறானே என்று நினைத்து மறுக்காமல் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

  christmas

  க்யூஜே (QJ) என்ற அந்த சிறுவன் தான் ஆசையாக பெற்றுக்கொண்ட ஏர்பாட்ஸை வாயில் வைத்தபடி இருந்திருக்கிறான். எதற்ச்சையாக அதனை அப்படியே விழுங்கியுள்ளான். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் ஏர்பாட்ஸ் சிறுவனின் ரிப் கேஜிற்கு கீழ் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் மருத்துவர்கள் அந்த ஏர்பாட்ஸ் தானாகவே சிறுவனின் உடலிலிருந்து வெளியேறும் வகையில் சிகிச்சையளிப்படும் எனவும் சிறுவன் நலமுடன் இருப்பதாக அவன் அம்மாவிடம் கூறப்பட்டது. 

  இதுகுறித்து சிறுவனின் தாயார் ஸ்ட்ரோவுட் கூறியதாவது,”என் மகன் இதுபோன்று விழுங்கிவிடுவான் என்று சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை,அவன் வளரும்வரை நான் எனது பழைய வகை ஹெட்செட்டை தான் கொடுத்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.இந்த சம்பவம் மற்ற தாய்மார்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.