கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து!

  0
  4
  sreeshanth1

  கொச்சி: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் நடந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் மற்றும் குடும்பத்தினர் உயிர் தப்பினர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இவரது வீடு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது.

  தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசாந்த் வீட்டின் உள்ளே இருந்து புகை வந்துள்ளது. பலத்த காற்று வீசியதால் சிறிது நேரத்தில் அங்கு தீப்பிடித்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

   இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீயானது வீட்டின் முன்பக்கம் எரிந்ததால் முன்பக்கத்திலிருந்த அரை ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தின் போது ஸ்ரீசாந்த்தும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் முதல் மாடியிலிருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.