கிரிக்கெட் வீரரை மணக்கும் சனியா மிர்சாவின் சகோதரி… யாரென்று தெரியுமா?

  0
  1
  Sania mirza sister

  ஆனம் மிர்சா பிரபல கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீன் மகன் ஆசாத்தை திருமணம் செய்யவிருப்பதாகவும் இவர்கள் இருவருக்கும் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது என்றும் சானியா மிர்சா குறிப்பிட்டார்.

  சானியா மிர்சாவின் சகோதரி பிரபல கிரிக்கெட் வீரரின் மகனை மணக்க இருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனை தற்போது உறுதி செய்திருக்கிறார் சானியா மிர்சா.

  Sania mirza and her sister

  பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சானியா மிர்சாவின் சகோதரியான ஆனம் மிர்சாவும் பிரபல கிரிக்கெட் வீரர் மகனும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. 

  Azad

  இதனால் மீண்டும் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை தான் இவரும் திருமணம் செய்ய இருக்கிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வதந்திகளை பரப்ப துவங்கினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சானியா மிர்சா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, யாரை தனது சகோதரி திருமணம் செய்ய இருக்கிறார் என்பதையும் தெரிவித்தார்.

  Sania mirza and her sister

  அதில், ஆனம் மிர்சா பிரபல கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீன் மகன் ஆசாத்தை திருமணம் செய்யவிருப்பதாகவும் இவர்கள் இருவருக்கும் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது என்றும் சானியா மிர்சா குறிப்பிட்டார்.

  ஆனம் மிர்சா ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். ஆசாத் கிரிக்கெட் வீரராக இருக்கிறார். இவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.