கிரிக்கெட் வீரருடன் காதலா? மனம்திறந்த அனுஷ்கா!

  0
  12
  anushka

  நடிகை அனுஷ்கா, வட இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார். 

  நடிகை அனுஷ்கா, வட இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார். 

  இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுஷ்கா. அதன்பின் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அனுஷ்காவின் திருமணம் எப்போது என்று அவரது பெற்றோர்களை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகுபலி படம் வெளியான பின்பு அனுஷ்காவும் பிரபாஸும் காதலிக்கிறார்கள் என்று பல வதந்திகள் பரவின. ஆனால் இருவரும் நாங்கள் எப்போதும் நண்பர்கள் என்று கூறி இருவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன்பின் வட இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. 

  anushka

  இதுகுறித்து விளக்கமளித்த அனுஷ்கா,  “வட இந்திய கிரிக்கெட் வீரருடன் காதல் என வெளியான செய்தியில் உண்மையில்லை. அது வெறும் வதந்தி. இதுபோன்ற வதந்தி பரவுவது எனக்கு மன வருத்தமாக உள்ளது. எனது திருமணம் பற்றி பெற்றோர்கள் முடிவெடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.