கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்த பாம்பு.. அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!

  7
  snake

  உள்ளூர் போட்டியான ராஞ்சி கோப்பை தொடர் நேற்று தொடங்கிய நிலையில், விஜயவாடா மற்றும் ஆந்திரா அணிகளுக்கிடையே முதல் போட்டி தொடங்கியது.

  உள்ளூர் போட்டியான ராஞ்சி கோப்பை தொடர் நேற்று தொடங்கிய நிலையில், விஜயவாடா மற்றும் ஆந்திரா அணிகளுக்கிடையே முதல் போட்டி தொடங்கியது. இந்த போட்டி விஜயவாடாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற விஜயவாடா அணி பௌலிங்கை தேர்வு செய்து, போட்டியைத் தொடங்குவதற்காக மைதானத்தில் நின்ற கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பாம்பு ஒன்று மைதானத்துக்குள் புகுந்தது.

  ttn

  இதனைக் கண்ட வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாம்பு மைதானத்திலேயே சுற்றிக் கொண்டிருந்ததால்  போட்டியைத் தொடங்குவதற்குச் சற்று தாமதம் ஆகியுள்ளது. அதன் பின்னர், அந்த பாம்பை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர் வழக்கம் போலப் போட்டி தொடங்கியது. 

   

  இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” போட்டியைத் தாமதம் ஆகிய பாம்பு.. போட்டியின் தொடக்கத்தைத் தாமதப்படுத்தக் களத்தில் ஒரு பார்வையாளர் வந்திருந்தார்” என்று பதிவிட்டு, அதன் வீடியோவையும் பகிர்ந்துள்ளது. 

  முதலாவதாக பேட்டிங் செய்வதற்குக் களம் இறங்கிய ஆந்திரா அணி 74 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக 83 ரன்களை ஹனுமா விஹாரி 8 குவித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய விஜயவாடா அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 26 ரன்கள் எடுத்தது.