கிரிக்கெட்டில் ஓய்வெல்லாம் கிடையாது! திடீரென வடிவேலுவாக மாறிய கிறிஸ் கெயில்! 

  0
  4
  கிறிஸ் கெயில்

  மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.

  மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.

  ind vs wi

  நேற்று நடைப்பெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  இந்த போட்டி, கிறிஸ் கெயில் விளையாடிய 301-வது போட்டி ஆகும். அதனைக் குறிக்கும் வகையில் வழக்கமாக அணியும் 45-ம் என் ஜெர்சிக்கு பதிலாக, 301  எண் பதித்த ஜெர்சியுடன் விளையாடினார்.
  நேற்றைய போட்டியில் கிறிஸ் கெயில் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டமிழந்து செல்லும் பொது இந்திய வீரர்கள் வழியனுப்பி வைத்தனர்.

  gayle

  இதனால் நேற்று நடைபெற்றது தான் கெயிலின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக இருக்கும் என்று கருதப்பட்டது.  ஆனால், நேற்றைய போட்டிக்கு பிறகு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள கெயில், ”நான் ஓய்வை அறிவிக்கவே இல்லை. அடுத்த நான் அறிவிக்கும் வரை கிரிக்கெட்டில் வலம் வருவேன்” என தெரிவித்துள்ளார்.

  gayle

  உலகக்கோப்பை தொடருடன் கெயில் ஓய்வுபெறுவார் என கூறப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு எதிராக நடக்க இருக்கும் ஒருநாள் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக கெயில் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென்று வடிவேலு பாணியில், ‘அது போன மாசம்… இது இந்த மாசம்’ கதையாக,  தான் ஓய்வு குறித்து அறிவிக்கவில்லை என்று தனது மனதை மாற்றிக் கொண்டார். குறைந்தபட்சம், நேற்று போட்டி முடிந்த பின்னர், இந்திய அணி வீரர்கள் மரியாதை செய்து வழியனுப்பி வைக்கும் போதாவது கெயில் இந்த உண்மையை சொல்லியிருக்கலாம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிறிஸ் கெயிலை கிண்டலடித்து வருகிறார்கள்.