கியர் மாற்ற இளம் பெண்கள்…ஸ்டைல் காட்டிய டிரைவருக்கு லைசன்ஸ் பறிபோனது!

  0
  19
  டிரைவர்

  பஸ்ஸில் இளம் பெண்களை கியர் மாற்ற வைத்து ஸ்டைல் காட்டிய டிரைவரின் லைசன்ஸ் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
  கேரள மாநிலம் கல்பெட்டா பகுதியில் கல்லூரி மாணவ – மாணவிகளுடன் சென்ற பஸ்ஸில் எடுக்கப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

  பஸ்ஸில் இளம் பெண்களை கியர் மாற்ற வைத்து ஸ்டைல் காட்டிய டிரைவரின் லைசன்ஸ் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
  கேரள மாநிலம் கல்பெட்டா பகுதியில் கல்லூரி மாணவ – மாணவிகளுடன் சென்ற பஸ்ஸில் எடுக்கப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவர் ஸ்டைலாக கண்ணாடி அணிந்து இருந்தார். இளம் பெண்களை கிளச் மாற்றும்படி கூறுகிறார். அவர் முன்னாள் தள்ளச் சொன்னால் அவர்கள் முன்னாள் தள்ளுகின்றனர்.

  driver

  பின்னர், பின்னால் தள்ளச் சொல்கிறார். இப்படி வீடியோ முழுக்க விளையாட்டாக செல்கிறது. வீடியோ வைரல் ஆனதும் இதுபற்றி விசாரணை நடத்தும்படி ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில், வாகனத்தை பாதுகாப்பாக இயக்கத் தவறியதாக ஓட்டுநர் ஷாஜியின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.