காஷ்மீர் வொண்டர்புல் காஷ்மீர் ! காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர் ! இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் !

  56
  jammu

  ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.

  ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.

  jammu1

  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-ஆவது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நீக்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. யாத்ரிகர்கள் வெளியேற்றப்பட்டனர். சுற்றுலாவையே நம்பிய பல சிறுதொழில்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் ஊடக செய்தியாளர்கள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதிக்கப்பட்டனர். இணையதளங்கள் துண்டிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவ பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தது.

  கடந்த இரண்டு மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய நிலையில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், ஆளுநரின் ஆலோசகர்கள், காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  இக்கூட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடி நீக்கப்பட்டதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி வந்து செல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  jammu

  ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன என்ன தெரியுமா? குல்மார்க், ஸோன்மார்க், ரகுநாத் கோவில், பாஹூ கோட்டை, முஃபாரக் மண்டி அரண்மனை, பீர் பாபா, சாடர் மலையேறுமிடம், வீர்நாக் முகலாயர் தோட்டம், ஶ்ரீநகர், தால் ஏரி, மனஸபால் ஏரி, ஷாலிமர் முகலாயர் தோட்டம், நிஷாந்த் முகலாயர் தோட்டம், சேஸ்மிஷாகி முகலாயர் தோட்டம், பாதம்வாரி தோட்டம், பாரி மஹால், சங்கராச்சாரியா கோவில், ஹரி ப்ரபாத் கோவில், கீர் பவானி கோவில், பாகல்ஹாம், பிடாப் பள்ளத்தாக்கு, யுஸ்மார்க், அரு, அமர்நாத் கோவில், வைஷ்னோ தேவி கோவில், பாற்னிடாப், பாதர்வாஹ், பூஞ்ஜ், ஸனாஸார், புஞ்ஜ் பழைய கோட்டை, பிம்கார்ஹ் கோட்டை, ராம் நகர் கோட்டை, லே, நுப்ரா பள்ளத்தாக்கு, ஸோ மொரிரி ஏரி, பங்கோங் ஏரி, ஸான்ஸ்கார் ஆகியனவாகும்