காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவின் ராஜ தந்திரம் வெளிப்பட்டுள்ளது- ரஜினி மீண்டும் பாராட்டு

  0
  1
  ரஜினிகாந்த்

  காஷ்மீர் விவகாரத்தை மோடியும், அமித்ஷாவும் ராஜாதந்திரத்தோடு கையாண்டுள்ளனர் என நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை மீண்டும் பாராட்டியுள்ளார். 

  சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,  “காஷ்மீர் விவகாரத்தை மோடியும், அமித்ஷாவும் ராஜாதந்திரத்தோடு கையாண்டுள்ளனர். திட்டப்படுத்தி செயல்படுத்திய விதம் கிருஷ்ணா, அர்ஜுனரை போல் இருந்தது. காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஒரு தாய் வீடாக இருக்கிறது. தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைவதற்கு நுழைவு வாயில் போல காஷ்மீர் உள்ளது.

  ரஜினி

  அதை முடிவுகட்ட ராஜதந்திரமாக 144 தடை உத்தரவை அமல்படுத்தி, பிரச்சனை செய்பவர்களை வீட்டு சிறையில் வைப்பது போல் வைத்து, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். தயவு செய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும் என தெரிந்து ஆக்கினால் நல்லது. இது நாட்டின் பாதுகாப்பு சம்மதப்பட்டது, அதற்காக தான் நான் அவ்வாறாக கூறினேன். தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறினார்.