காஷ்மீர் மக்களை காட்டிலும் அங்கு அரசியல் செய்யமுடியவில்லை என்றுதான் காங்கிரசுக்கு அதிக கவலை- அமித் ஷா கிண்டல்

  11
  அமித் ஷா

  காஷ்மீர் மக்களை காட்டிலும் அங்கு அரசியல் செயல்பாடு குறித்துதான் காங்கிரஸ் அதிகம் கவலைப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிண்டல் அடித்தார்.

  நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துளை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்புநிலை முழுமையாக திரும்பி விட்டது. என்னால் காங்கிரஸை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியாது. ஏனென்றால் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியதால் அங்கு ரத்தம் சிந்தும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை.

  காங்கிரஸ்

  துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு கூட சுடப்படவில்லை மற்றும் அதனால் யாரும் உயிர் இழக்கவில்லை. 99.5 சதவீத மாணவர்கள் அங்கு தேர்வுகள் எழுதினார்கள். ஆனால் ஆதிர் ரஞ்சன் ஜி (காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்) இது இயல்புநிலை இல்லை என்று கூறுகிறார். ஸ்ரீநகரில் 7 லட்சம் பேருக்கு  ஓ.பி.டி. சேவைகள் கிடைத்துள்ளது, ஊரடங்கு மற்றும் 144 பிரிவு அனைத்து இடங்களிலும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதிர் ஜி பொறுத்தவரை இயல்புநிலைக்கு அளவுகோல் அரசியல் செயல்பாடுதான்.

  காஷ்மீர்

  உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தப்பட்டது குறித்து என்ன சொல்கிறீர்கள்? எந்தவொரு வன்முறை நிகழாமல் வட்டம்-ஊராட்சி தேர்தல்களில் 95 சதவீத வாக்குகள் பதிவானது. சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை அங்குள்ள நிர்வாகம்தான் விடுதலை செய்ய முடியும். மத்திய அரசு அவர்கள் முடிவில் தலையிடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.