காஷ்மீர் குறித்து கருத்து…….இம்ரான்கானுக்கு விரக்தி உணர்வு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது….. மத்திய அரசு பதிலடி

  0
  1
  இம்ரான் கான்

  காஷ்மீர் தொடர்பான இம்ரான் கானின் கருத்து அவர் மனமுடைந்து இருப்பதை மற்றும் விரக்தி உணர்வு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது என மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

  சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் சர்வதேச பொருளாதார மன்றத்தின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டுள்ளார். அங்கு சர்வதேச ஊடக கவுன்சிலுக்கு இம்ரான் கான் அளித்த பேட்டியில், இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே மோதலே தவிர்க்க உலக நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என தெரிவித்தார்.

  ரவீஸ் குமார்

  இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு துறை செய்திதொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது:இந்தியா மற்றும் இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் குறித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிக்கைகளை பார்த்தோம். அவரது கருத்துக்களின் உள்ளடக்கம் மற்றும்  தொனியை கண்டு நாம் ஆச்சரியப்படுவதில்லை. அவர் சொன்னதில் எதுவும் புதியது இல்லை. அவரது கருத்துக்கள் அவர் மனமுடைந்து இருப்பதையும் மற்றும் நம்பிக்கை இழந்து வருவதை வெளிப்படுத்துகிறது. அந்த கருத்துக்கள் தவறான மற்றும் முரண்பாடானது மட்டுமல்ல விரக்தி உணர்வு அதிகரித்து வருவதை நிரூபணம் செய்கிறது.

  தீவிரவாதம்

  தங்களது இரட்டை நிலைப்பாட்டை உலக சமுதாயம் கண்டதை பாகிஸ்தான் உணர வேண்டும். தீவிரவாதத்தால் தாங்கள் பாதிக்கப்படுவது போல் ஒரு பக்கம் பாசாங்கு செய்து கொண்டு, மற்றொரு புறம் இந்தியா மற்றும் உலக நாடுகளில் தீவிரவாதம மற்றும் பயங்கரவாத செய்ய அவர்கள் ஆதரிக்கிறார்கள். இந்தியாவுடான உறவை சுமூகமாக்க பாகிஸ்தான் விரும்பினால், தீவிரவாதம் மற்றும் விரோத இல்லாத சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது.