காஷ்மீர் உங்களை அன்புடன் வரவேற்கவில்லை. நன்றி மீண்டும் வரவேண்டாம்

    0
    1
    விநாயகர்

    காஷ்மீரில் எந்த பிரச்னையும் இல்லை, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து சோதனை செய்து கொள்ளலாம் என காஷ்மீர் ஆளுநர் அறிவித்து இருந்தார். உடனே ராகுல் காந்தி இதோ அடுத்த பிளைட் புடிச்சி உடனே வர்றேன் என டிவிட் போட, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா சொன்ன மாதிரியே பிளைட் புடிச்சி வந்து பீதி கிளப்புனா என்னப்பா நியாயம் என பல்டி அடித்து விட்டார்.

    ஆளுநர் சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல் போனாலும், ராகுல் எதிர்கட்சி தலைவர்களை அழைத்துக்கொண்டு ஸ்ரீ நகர் விமான நிலையம் போய் இறங்கி விட்டார். ராகுல் காந்தி தலைமையில் சென்ற காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியவாத காங்கிரஸ் என 9 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை மடக்கிய விமான நிலைய அதிகாரிகள் மீண்டும் விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.